
கோலாலாம்பூர், மார்ச்-15-மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் புதியத் தலைவராக ஆனந்த் ராஜ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
நேற்று நடைபெற்ற அம்மன்றத்தின் 80-ஆவது ஆண்டு பொதுக்கூட்டத்தில், நடப்புத் தலைவர் Mohamad Ezri Abdul Wahab-ப்புக்குப் பதிலாக, 2026/2027 தவணைக்கான தலைவராக அவர் பேராளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
துணைத் தலைவராக Murshidah Mustafa, செயலாளராக ஆர். ஜெயபாலன், பொருளாளராக பீட்டர்-டக்ளஸ் லிங் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
புதியத் தலைவர் என்ற முறையில் “வழக்கறிஞர் மன்றத்தின் மதிப்புகளை காக்கவும், அச்சமின்றி, சார்பின்றி பேசவும்” ஆனந்த் ராஜ் உறுதியளித்தார்.
433 உறுப்பினர்கள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில், 11 தீர்மானங்கள் விவாதிக்கப்பட்டு, 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முக்கியமாக, சட்டத் துறைத் தலைவர் அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் அதிகாரர்களைப் பிரிக்க வேண்டும் என்ற தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.



