Latestமலேசியா

தற்போதைக்கு PdPR எனப்படும் வீட்டிலிருந்து கற்றல்-கற்பித்தல் முறை கிடையாது; கல்வியமைச்சு திட்டவட்டம்

கோலாலம்பூர், மார்ச்-17-PdPR எனப்படும் வீட்டிலிருந்து கற்றல்-கற்பித்தல் முறையை தற்போதைக்கு அறிமுகப்படுத்த எந்தத் திட்டமும் இல்லை என, கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

எனவே, பள்ளிகளில் நேரடி (face-to-face) வகுப்புகள் வழக்கம்போல் தொடரும் என, கல்வித் தலைமை இயக்குநர் டத்தோ Dr Mohd Azam Ahmad கூறினார்.

கோவிட்-19 காலத்தில் நடைமுறையில் இருந்ததுபோல, தற்போது மேற்காசிய நெருக்கடியைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள நிச்சமற்ற சூழ்நிலையில் PdPR மீண்டும் அமுலுக்கு வருமோ என பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.

ஆனால், தற்போது பள்ளி நேரடி கற்றலைத் தொடர்வதிலேயே முக்கிய கவனம் இருப்பதாக Dr Azam தெரிவித்தார்.

மாணவர்களின் கல்வி தடைப்பட்டு விடக் கூடாது; அதே சமயம் அனைத்து தரப்பினரின் நலனும் நல்வாழ்வும் காக்கப்பட்ட வேண்டுமென்றார் அவர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!