
ஈப்போ, மார்ச்-24-ஈப்போ, Station 18 எனுமிடத்தில் ஒரு மோட்டார் சைக்கிளைத் திருட முயன்றதாகக் கூறி, கும்பலொன்று ஆடவரை அடித்து உதைத்த சம்பவம் வைரலாகியுள்ளது.
பாதிக்கப்பட்டவரைக் கீழே தள்ளி, சுற்றி நின்றுகொண்டு அக்கும்பல் சரமாரியாகத் தாக்குவது வீடியோவில் பதிவாகியுள்ளது.
தாக்கியவர்கள், மோட்டார் சைக்கிளோட்டிகள் எனக் கூறப்படுகிறது.
எனினும், அந்நபர் தாக்கப்பட்டதற்கான உண்மைக் காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
போலீஸில் புகாரேதும் செய்யப்பட்டுள்ளதா என்பது பற்றியும் தகவல் இல்லை.



