
ஷா ஆலாம், மார்ச்-26-ஷா ஆலாம் HASiL அலுவலகம் இடமாற்றம் காண்பதாக, உள்நாட்டு வருவாய் வாரியமான HASiL அறிவித்துள்ளது:
அது தற்போது செயல்பட்டு வரும் Plaza Perangsang கட்டடத்தில் இருந்து, மார்ச் 30-ஆம் தேதி முழுமையாக மூடப்பட்டு, ஏப்ரல் 1 முதல் புதிய இடத்தில் செயல்படும்.
புதிய அலுவலகம், ஷா ஆலாம், செக்ஷன் 14, Persiaran Bandar Raya-வில் Menara HASiL Shah Alam என இனி அறியப்படும்.
இந்த மாற்றம், சேவை தரத்தை மேம்படுத்தவும், வாடிக்கையாளர்களுக்கு வசதியான சூழலை வழங்கவும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக HASiL அறிக்கையொன்றில் கூறியது.
திங்கள் முதல் வெள்ளி வரை, காலை 8:30 முதல் மாலை 4:30 வரை அங்குள்ள சேவை முகப்புகளில் பொது மக்களுக்கு சேவை வழங்கப்படும்.
கேள்விகள் அல்லது கருத்துகள் இருந்தால், 03-8911 1000 என்ற எண்களில் Hasil Contact Centre, HASiL Live Chat, அல்லது www.hasil.gov.my என்ற அதிகாரப்பூர்வ இணையத் தளம் வழியாக தொடர்பு கொள்ளலாம்.



