
கோலாலம்பூர், மார்ச்-29-விமானப் பயணிகளுக்கு உலகளவில் புதிய பாதுகாப்பு விதிகள் உடனடியாக அமுலுக்கு வருகின்றன.
அதாவது, அனைத்துலக பொது விமானப் போக்குவரத்து அமைப்பான ICAO, ஒவ்வொரு பயணிக்கும் அதிகபட்சம் 2 power bank -கள் மட்டுமே எடுத்துச் செல்ல அனுமதி வழங்கும் புதிய விதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
மேலும், விமானப் பயணத்தின் போது power bank -களை சார்ஜ் செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
lithium பேட்டரிகளால் ஏற்படும் தீ விபத்து அபாயங்களை குறைப்பதற்காக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே சில நாடுகள் மற்றும் விமான நிறுவனங்கள் இதுபோன்ற கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தியிருந்தாலும், ICAO-வின் இந்த அறிவிப்பு உலகளாவிய SOP தரநிர்ணயமாக அமைகிறது.
எனவே, பயணிகள் பயணம் மேற்கொள்வதற்கு முன் தங்களின் சாதனங்கள், விமான நிறுவனங்களின் விதிமுறைகளுக்கு ஏற்ப உள்ளதா என்பதை சரிபார்க்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.



