
ஈப்போ, ஏப்ரல்-1-SPM முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், அடுத்த கல்வி பாதையைத் தேர்வு செய்ய மாணவர்களுக்கு உதவும் நோக்கில், Karnival Jom Masuk IPTA 2026 எனும் வழிகாட்டி நிகழ்வு வரும் சனிக்கிழமை நடைபெறுகிறது.
இந்நிகழ்ச்சியை, ஈப்போ தீமோர் நாடாளுமன்ற உறுப்பினரின் அலுவலகமும், புந்தோங் சட்டமன்ற உறுப்பினரின் அலுவலகமும் இணைந்து நடத்துகின்றன.
இதில், SPM, STPM, A-Level மற்றும் டிப்ளோமா முடித்த மாணவர்கள், UPU விண்ணப்பம், IPTA சேர்க்கை, PTPTN கல்விக் கடடன், Matrikulation, Politeknik, Kolej Komuniti, TVET போன்ற பல்வேறு கல்வி வாய்ப்புகள் குறித்து நேரடியாக அதிகாரிகளிடமிருந்து வழிகாட்டுதலை பெறலாம்.
ஏப்ரல் 4, சனிக்கிழமை காலை 9.30 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை, ஈப்போ, Sam Chai சீனப் பள்ளி மண்டபத்தில் இந்நிகழ்வு நடைபெறுகிறது.
ஆர்வமுள்ள மாணவர்கள் திரையில் காணும் QR குறியீட்டை ஸ்கேன் செய்து பதிவுச் செய்யலாம்.
உயர் கல்வி பாதையைத் தேர்வு செய்யும் மாணவர்களுக்கு, இந்த Karnival ஒரு முக்கிய வழிகாட்டும் மேடையாக விளங்கும் என்பதால், மாணவர்கள் திரளாக பங்கேற்க அழைக்கப்படுகின்றனர்.



