
கோலாலம்பூர், ஏப்ரல்-2-மின்சார கட்டணம் உயர்த்தப்படுவதாக சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல்களை TNB மறுத்துள்ளது.
ஏப்ரல் மாதத்திலிருந்து கட்டணம் அதிகரிக்கும் என்ற அந்த தகவல்கள் தவறானவை…. இது பொது மக்களைக் குழப்பும் பொறுப்பற்ற நடவடிக்கை என அந்நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
இந்த பொய்ச் செய்தி குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி, தொடர்பு – பல்லூடக ஆணையமான MCMC-யிடம் புகாரளிக்கப்படும் என்றும் அது கூறிற்று.
எந்தவொரு மின்சாரக் கட்டண மாற்றங்களும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் மூலம் மட்டுமே நடைமுறைக்கு வரும்; இப்படி சமூக ஊடகங்களில் வெளியாகாது என TNB தெரிவித்தது.
எனவே, சரிபார்க்கப்படாத தகவல்களை பகிர வேண்டாம் எனவும், மக்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே நம்ப வேண்டும் எனவும் அது அறிவுறுத்தியது.
மேற்காசிய நெருக்கடிக்கு மத்தியில், மின்சாரக் கட்டணத்தை மறுஆய்வு செய்யும் எந்தத் திட்டமும் இல்லை என, மலேசிய எரிசக்தி ஆணையம் தெரிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.



