Latestமலேசியா

பாதசாரி மோதப்பட்ட வைரலான சம்பவம் சாலை பாதுகாப்பு மீதான கவலையை ஏற்படுத்தியுள்ளது

கோலாலம்பூர் ,ஜாலான் யாப் குவான் செங் (Jalan Yap Kwan Seng) சாலையில் பாதசாரி ஒருவரை மோட்டார் சைக்கிள் மோதிய விபத்து குறித்த காணொளி சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து, சாலை பாதுகாப்பு மீதான பல்வேறு கவலையை அது ஏற்படுத்தியது.

Threads தளத்தில் பரவலாகப் பகிரப்பட்ட அந்தக் காணொளியில், சாலையைக் கடக்க முயன்ற ஒரு பெண் மீது மோட்டார் சைக்கிள் மோதுவதை காணமுடிந்தது.

மேலும், அந்த மோட்டார் சைக்கிளோட்டி போக்குவரத்து விதிமுறைக்கு எதிராக சென்றதாகப் பலர் குற்றம் சாட்டினர். சம்பவ இடத்தைச் சுற்றி போக்குவரத்து குறைந்தபோது ​​அங்கிருந்த பலரும் பாதிக்கப்பட்டவருக்கு உதவ விரைந்தனர்.

அந்தப் பெண் அதிர்ச்சியின் காரணமாக அரை மயக்க நிலையில் இருந்ததாகவும் பல பெண்களும் அவருக்கு உதவ முன்வந்ததாகவும் வெளித்தோற்றத்தில், அவருக்குப் பெரிய காயங்கள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை என்றும நேரில் கண்ட சாட்சியான ஆடவர் ஒருவர் காணொளியில் தெரிவித்தார் .

ஜாலான் யாப் குவான் செங் சாலை நெடுகிலும் பல சந்திப்புகள், குறுகிய சாலைகள் மற்றும் அடிக்கடி பாதசாரிகள் கடக்கும் இடங்கள் இருப்பதால், வாகன ஓட்டிகள் வேகத்தைக் குறைத்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்ற அவர், அப்பகுதியில் உள்ள அபாயங்களையும் சுட்டிக்காட்டினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!