
புக்கிட் மெர்தாஜாம், ஏப்ரல்-13-1998-ஆம் ஆண்டு கோலாலம்பூர் காமன்வெல்த் போட்டியில் மலேசியாவுக்கு தங்கம் வென்று கொடுத்துப் பெருமை சேர்த்த பெருநடை ஜாம்பவான் ஜி. சரவணனுக்கு, இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சு ஆதரவுக் கரத்தை நீட்டியுள்ளது.
தற்போது 56 வயதாகும் சரவணன், MND எனும் நரம்பு மண்டல பாதிப்பால் அவதிப்பட்டு வருகிறார்.
நடக்கவோ, பேசவோ முடியாத நிலையில் இருக்கும் அவருக்கு, புக்கிட் மெர்தாஜாமில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்ற விளையாட்டுத் துறை அமைச்சர் Dr Taufik Johari நிதியுதவி வழங்கினார்.
நாட்டின் புகழை உலக அரங்கில் உயர்த்திய முன்னாள் வீரர்களை அரசாங்கம் ஒருபோதும் கைவிடாது என அமைச்சர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.
தேசிய விளையாட்டாளர் நல அறக்கட்டளையான YAKEB மூலமாகத் தொடர்ந்து அவரது மருத்துவச் செலவுகளும், மற்றத் தேவைகளும் கண்காணிக்கப்படும் என்றும் Taufik கூறினார்.
இதுவரை YAKEB மூலம் சுமார் 30,000 ரிங்கிட் வரை உதவி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இவ்வேளையில்,சரவணனின் மனைவி சசிகலா கூறுகையில், தற்போது அவரது நிலை சீராக இருந்தாலும், இரவு நேரங்களில் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுவதாகத் தெரிவித்தார்.
90-ஆம் ஆண்டுகளில் மலேசியக் கொடியை உலக அரங்கில் உயரப் பறக்கச் செய்த சரவணன் இந்த சோதனையிலிருந்து மீண்டு வர பிராத்திப்போம்…



