
கோலாலம்பூர், ஏப்-13-
இந்த மாத தொடக்கத்தில் LRT பயணி ஒருவர் தண்டவாளத்தில் விழுந்த சம்பவத்தைத் தொடர்ந்து, (LRT) நடைமேடைகளில் தடுப்புகளை அமைக்க Prasarana மலேசியா பெர்ஹாட் நிறுவனம் முன்மொழிந்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் இன்று தெரிவித்தார்.
இருப்பினும், இதில் சம்பந்தப்பட்ட செலவுகளைக் கருத்தில் கொண்டு, இது சொல்வதற்கு எளிதானது, ஆனால் செய்வதற்கு கடினமானது என்று அவர் கூறினார்.
நாம் அனைத்து (LRT) நிலையங்களையும் மேம்படுத்த வேண்டியிருக்கும் என்று செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.
புதிய MRT நிலையங்களைப் போல் இல்லாமல் பயணிகளை எச்சரிப்பதற்காக இதுபோன்ற தடுப்புகளை அமைப்பதற்கும் அபாய எச்சரிக்கை சைரன்களைப் பொருத்துவதற்கும் உள்ள எளிய வழியை அமைச்சு ஆராய்ந்து வருகிறது.
இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க, இந்த அம்சங்களை கூடிய விரைவில் நிறுவ முடியும் என நம்புகிறோம் என அவர் தெரிவித்தார்.
ஏப்ரல் 3 ஆம் தேதியன்று Kelana Jaya , எல்.ஆர்.டி ரயில் தடத்திற்கான Abdullah Hukum நிலையத்தில் ஒரு பயணி தண்டவாளத்தில் விழுந்தார்.
பாதிக்கப்பட்ட 39 வயதுப் பெண், கைகளிலும் முகத்திலும் ஏற்பட்ட காயங்களுடன் உயிர் தப்பினார்.
தண்டவாளத்தில் விழுவதற்கு முன்பு தான் வழுக்கி விழுந்ததாக அவர் பின்னர் போலீசிடம் தெரிவித்தார்.
அப்பெண் குணமடைந்ததைத் தொடர்ந்து மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்.
இதுபோன்ற சம்பவங்கள் கடந்த காலத்திலும் நிகழ்ந்துள்ளதை அந்தோனி லோக் ஒப்புக்கொண்டார்.



