இஸ்லாமாபாத் அமைதிப் பேச்சுவார்த்தை: திங்களன்று அமெரிக்கா – ஈரான் மீண்டும் சந்திப்பு

வாஷிங்டன், ஏப்ரல்-18,
அமெரிக்கா – ஈரான் இடையிலான உயர்மட்ட அமைதிப் பேச்சுவார்த்தை திங்கட்கிழமை பாகிஸ்தானியத் தலைநகர் இஸ்லாமாபாத்தில் மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
7 வாரங்களாக நீடித்து வரும் மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான உடன்பாட்டை எட்ட, இரு நாடுகளும் மிகவும் நெருங்கி வருவதாக அதிபர் டோனல்ட் ட்ரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, ஈரான் தனது கையிருப்பில் உள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஒப்படைக்க வேண்டும் என்ற Nuclear Dust கோரிக்கையை அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது.
அதே சமயம், ஈரானின் முடக்கப்பட்ட 20 பில்லியன் டாலர் நிதியை விடுவிக்க அமெரிக்கா முன்வந்துள்ளதாகவும்தெரிகிறது.
தவிர, உலகளாவிய எண்ணெய் விநியோகத்தை உறுதிப்படுத்த Hormuz நீரிணையை நிரந்தரமாகத் திறப்பதும் இந்தப் பேச்சுவார்த்தையின் முக்கிய நோக்கமாகும்.
கடந்த வாரம் 21 மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், அது மீண்டும் தொடங்கவிருப்பது நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
என்றாலும், அணு சக்தி விஷயத்தில் ஈரான் இறங்கி வருமா என்பது சந்தேகமாகவே உள்ளது.
ஒருவேளை, இந்த இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை வெற்றியடைந்தால், ஒப்பந்தத்தில் நேரில் கையெழுத்திட தாம் பாகிஸ்தான் செல்லக்கூடும் என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.



