Latestஉலகம்

ஜெர்மனியில் கார் பந்தயத்தில் 7 கார்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் ஓட்டுநர் மரணம்

நுரெம்பர்க் , ஏப் 20 – ஜெர்மனியில் , நியூபர்கிரிங்கில் ( Nuerburgring ) கார் பந்தயத்தின்போது ஏழு கார்கள் மோதிக் கொண்ட விபத்தில் அனுபவமிக்க நீண்ட தூரப் பந்தய வீரரான பின்லாந்தைச் சேர்ந்த 66 வயதுடைய ஜூஹா மியெட்டினென் ( Juha Miettinen) உயிரிழந்தார். நான்கு முறை பார்முலா ஒன் உலக சாம்பியனான மேக்ஸ் வெர்ஸ்டாப்பனும் (Max Verstappen) இந்தப் பந்தயத்தில் கலந்துகொள்வதாக இருந்தார். எனினும் சனிக்கிழமை நடைபெற்ற தகுதிச் சுற்றுப் போட்டியில் அவர் பங்கேற்கவில்லை. விபத்தைத் தொடர்ந்து போட்டி நிறுத்தப்பட்டதுடன், ஏற்பாட்டாளர்கள் நிகழ்வை இடைநிறுத்தினர். இது, மே மாதம் நடைபெறவுள்ள 24 மணி நேரப் பந்தயத்திற்கான நியூர்பர்கிரிங் லாங்ஸ்ட்ரெக்கன் (Nuerburgring Langstrecken) தொடரின் தகுதிச் சுற்றுகளின் ஒரு பகுதியாகும். இந்தப் பந்தயத்தில் நெதர்லாந்தைச் சேர்ந்த Max Verstappen பங்கேற்க உள்ளார்.

நான்கு மணி நேரப் பந்தயம் தொடங்கி 25 நிமிடங்களிலேயே, இந்த விபத்து நிகழ்ந்தது. Juha Miettinen சிகிச்சை மையத்தில் உயிரிழந்தார். மற்ற ஆறு ஓட்டுநர்கள் உயிருக்கு ஆபத்தில்லாத காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவசர மருத்துவப் பணியாளர்கள் உடனடியாக வந்தபோதிலும், வாகனத்திலிருந்து Juha Miettinen வெளியேற்றப்பட்ட பிறகு, மருத்துவப் பணியாளர்களால் அவரைக் காப்பாற்ற முடியவில்லை. இந்த விபத்து மற்றும் Miettinen மரணத்தால் தாம் அதிர்ச்சியடைந்ததாக Max Verstappen தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!