Latestமலேசியா

கோத்தா திங்கியில் உணவகத்தில் துப்பாக்கிக் சூடு; மூவர் மரணம், 71 வயது நபர் கைது

கோத்தா திங்கி, ஏப் 20 – கோத்தா திங்கியில் தாமான் கோத்தா ஜெயாவில் உள்ள ஒரு உணவகத்தில் நேற்று நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 71 வயது ஆடவர் ஏழு நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இன்று காலை இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சந்தேக நபர் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அந்நபரை தடுத்து வைக்கும் உத்தரவை மாஜிஸ்திரேட் நூர்கலிடா பர்ஹானா அபு பக்கர் (Nurkhalida Farhana Abu Bakar ) பிறப்பித்தார். அவரது தடுப்புக் காவல் இன்று முதல் அமலுக்கு வருகிறது. தண்டனைச் சட்டத்தின் 302 ஆவது பிரிவின் கீழ் கொலைக் குற்றத்திற்காக விசாரிக்கப்பட்டு வரும் அந்த சந்தேக நபர், போலீஸ் பாதுகாப்புடன் கைவிலங்குகளுடன் காலை 9 மணிக்கு நீதிமன்ற வளாகத்திற்கு கொண்டு வரப்பட்டார்.

இரண்டு ஆடவர்கள் மற்றும் ஒரு வியட்நாமியப் பெண் கொல்லப்பட்ட இந்தத் துப்பாக்கிச் சூட்டிற்கு தனிப்பட்ட கடன் விவகாரம் காரணமாக இருக்கலாம் என்று விசாரணையாளர்கள் நம்புவதாகக் நேற்று ஜோகூர் போலீஸ் தலைவர் டத்தோ அப் ரஹ்மான் அர்சாட் ( Ab Rahaman Arsad ) கூறியிருந்தார். பிற்பகல் மணி
1.30 க்கு நடந்த இந்தச் சம்பவத்தில், 37 முதல் 63 வயதுக்குட்பட்ட மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். துப்பாக்கி உரிமம் வைத்திருந்த அந்த நபர், துப்பாக்கிச் சூடு நடந்த 30 நிமிடங்களுக்குப் பிறகு, சம்பவ இடத்திலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் கைது செய்யப்பட்டார். அந்நபரிடமிருந்து போலீசார் துப்பாக்கி ஒன்றை பறிமுதல் செய்ததோடு அவருக்கு இதற்கு முன் எந்தக் குற்றப் பதிவும் இல்லை என்பதும் தொடக்கக் கட்ட விசாரணையில் கண்டறிந்தனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!