Latest

RM 221,044 கடன் அல்ல, அது ‘அன்பளிப்பு’; தம்பிக்கு எதிராக அண்ணன்கள் தொடர்ந்த வழக்கில் சிரம்பான் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு

சிரம்பான், ஏப்ரல்-22-2 அண்ணன்கள் தங்களது தம்பிக்கு வழங்கிய 221,044 ரிங்கிட் பணம் ‘கடன்’ அல்ல, அது ஒரு ‘அன்பளிப்பு’ என்று சிரம்பான் செஷன்ஸ் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பளித்துள்ளது.

இதன் மூலம் அந்தப் பணத்தைத் திரும்பக் கேட்கும், பெரிய பொறியியலாளர் நிறுவனத்தின் இயக்குநர்களான அந்த அண்ணன்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

இளைய சகோதரர் வேல் மனோகரனுக்குக் கொடுத்தக் கடனைத் தம்பி திருப்பித் தரவில்லை என டத்தோ பட்டம் கொண்டவர்களான எம். நடராஜன் மற்றும் எம், சத்திஷ்குமார் இருவரும் வழக்குத் தொடுத்திருந்தனர்.

அந்த 221,044 ரிங்கிட்டில், 160,000 ரிங்கிட் வேல் மனோகரனின் கல்விக்காகவும், எஞ்சிய 60,444 ரிங்கிட் குடும்ப நிறுவனங்களான Linsun Engineering Sdn Bhd மற்றும் Linsun Global (M) Sdn Bhd ஆகிய நிறுவனங்களின் கீழ் ஒரு வீட்டை வாங்குவதற்கான முன்பணத்தைச் செலுத்தவும் கொடுக்கப்பட்டது.

ஆனால், பணத்தைப் பரிமாற்றம் செய்யும் போது அது கடன் என்பதற்கான எந்தவொரு முறையான ஒப்பந்தமோ அல்லது ஆவணமோ அவர்களுக்குள் கையெடுத்திடப்படவில்லை.

இந்நிலையில், அந்தப் பணம் குடும்ப உறவின் அடிப்படையில் அன்பளிப்பாக வழங்கப்பட்டது எனத் தம்பி வாதிட்டார்.

வழக்கை விசாரித்த நீதிபதி அபு பாகார் மானாட், அந்தப் பணத்தைப் பரிமாற்றம் செய்யும் போது அண்ணன்களுக்கும் தம்பிக்கும் இடையில் உறவு சுமூகமாக இருந்தது என்பதையும், கடன் என்பதற்கான ஒப்பந்தம் எதுவும் கையெழுத்தாகவில்லை என்பதையும் விசாரணையில் உறுதிச் செய்யப்பட்டதாகக் கூறினார்.

எனவே, மூவருக்கும் இடையிலான நெருக்கமான உறவின் அடிப்படையில் குடும்ப உறுப்பினருக்கான ஆதவாக வழங்கப்பட்ட அந்த பணம் ‘அன்பளிப்பே’ என்றே சட்டப்படி கருதப்படும் என நீதிமன்றம் அதன் தீர்ப்பில் விளக்கியது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!