Latestமலேசியா

தெலுங்கு சமூகத்துடன் ரவின் குமார் சந்திப்பு; ஜோகூர் அரசின் திட்டங்கள் குறித்து விளக்கம்

ஜோகூர் பாரு, ஏப்ரல்-22-ஜோகூர் மாநிலத்தின் ஒற்றுமை மற்றும் வளர்ச்சியை இலக்காகக் கொண்டு, மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ரவின் குமார் கிருஷ்ணசாமி, ஜோகூர் தெலுங்கு சங்க நிர்வாகிகளுடன் ஒரு சிறப்புக் கலந்துரையாடலை நடத்தினார்.

ஜோகூர் மந்திரி பெசார் டத்தோ ஓன் ஹஃபிஸ் காசி தலைமையிலான மாநில அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்களைச் சமூகத்தின் அடித்தட்டு மக்களிடம் கொண்டு சேர்ப்பதே இந்தச் சந்திப்பின் முக்கிய நோக்கமாகும்.

இச்சந்திப்பின் போது, தெலுங்கு சமூகத்தின் தேவைகள் மற்றும் அவர்களின் எதிர்பார்ப்புகள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

அவர்களின் குரல்களைக் கேட்டறிந்து, அதற்கேற்ப மாநில அரசின் திட்டங்களை வடிவமைக்க இந்தத் உரையாடல் ஒரு பாலமாக அமைந்ததாக ரவின் குமார், தனது ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்தார்.

ஜோகூரின் பன்முகத் தன்மை மற்றும் நல்லிணக்கத்தைப் பாதுகாப்பதில் அனைத்துச் சமூகங்களுக்கும் சமமான பங்கு உண்டு;

அவ்வகையில், ஒவ்வொரு சமூகத்தின் குரலும் கேட்கப்படுவதை உறுதிச் செய்வதே ஜோகூர் அரசின் முதன்மை நோக்கம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!