
மலாக்கா, ஏப்ரல்-24-மலாக்காவில் நடைபெற்ற தேசிய அளவிலான தமிழ்ப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கான இலக்கவியல் தலைமைத்துவம் மற்றும் மடானி கல்வி உருமாற்றுக் கருத்தரங்கை இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.
தமிழ்ப் பள்ளிகள் தமிழாசிரியர் கழகம், இலக்கவியல் அமைச்சு மற்றும் கல்வியமைச்சு ஆகியவை இணைந்து 3 நாட்களுக்கு இந்தச் சிறப்பு நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன.
2030-க்குள் மலேசியா AI நாடாக உருவெடுக்கப் பள்ளிகள் முக்கியப் பங்காற்ற வேண்டும் என அமைச்சர் வலியுறுத்தினார்.
கடந்தாண்டு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 25.5% பங்களித்த இலக்கவியல் துறை, 2030-ல் 30% உயரும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கிள்ளான் பள்ளத்தாக்கு மட்டுமின்றி, மாநில அளவிலும் இத்தகைய பயிற்சிகளை விரிவுபடுத்த அமைச்சு உத்தேசித்துள்ளதாக கோபிந்த் சொன்னார்.
இக்கருத்தரங்கில் 470 தலைமையாசிரியர்கள் கலந்துகொண்ட வேளை, பேராசிரியர் Dr டேவிட் ஆசிர்வாதம் AI குறித்து உரையாற்றினார்.



