Latestமலேசியா

கெப்போங் அடுக்குமாடியில் பெண் மரணம்; போலீஸ் விசாரணை

கெப்போங், மே-6-கோலாலாம்பூர், கெப்போங்கில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பில், ஒரு பெண் மர்மமான முறையில் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

தகவல் கிடைத்ததும், போலீஸார் உடனடியாக சம்பவ இடம் சென்று விசாரணையை தொடங்கினர்.

30 வயதிலான அந்த உள்ளூர் பெண்ணின் உடலில் எந்தக் காயங்களும் காணப்படவில்லை.

மரணத்திற்கான காரணம் குறித்து இதுவரை உறுதியான தகவல் வெளியாகவில்லை.

சவப்பரிசோதனை முடிவு வரும் வரை, இது திடீர் மரணமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

அனைத்து கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், தகவல் தெரிந்தவர்கள் அருகிலுள்ள போலீஸ் நிலையத்தை தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!