
கடத்தல் மற்றும் எல்லை தாண்டிய குற்றச்செயல்களைத் தடுக்க, ட்ரோன்கள் மற்றும் AI எனும் செயற்கை நுண்ணறிவு மற்றும் ட்ரோன்கள் பயன்பாட்டை விரிவுபடுத்த Bukit Aman திட்டமிட்டுள்ளது. மற்றும் அண்டை நாடுகளுடன் உளவுத் தகவல்களைப் பகிர்ந்து கொள்வதன் மூலம் மலேசியாவின் நில மற்றும் கடல் எல்லைகளிலும் அது பாதுகாப்பை பலப்படுத்தி வருகிறது.
எல்லைப் பகுதிகளின் பாதுகாப்பில் கவனம் செலுத்தி வரும் காவல்துறை, மலேசிய எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு நிறுவனம் மற்றும் பிற அமலாக்கத் தரப்புகளின் உதவிகளுடன் முக்கிய நுழைவுவாயில்களில் பாதுகாப்புப் பணிகளை மேம்படுத்தி வருவதாக Bukit Aman உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத் துறையின் இயக்குனர் ஆணையர் Datuk Seri Mohd Yusri Hassan Basri தெரிவித்தார்.
கடத்தல் என்பது எல்லை தாண்டிய ஒரு பிரச்சினை. அண்டை நாடுகளின் நெருக்கமான ஒத்துழைப்பும் தேவைப்படுகிறது. இராணுவம், காவல்துறை மற்றும் தாய்லாந்தின் சில அமைப்புகள் பங்கேற்ற ஒரு கூட்டத்தில் எல்லை தாண்டிய ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த ஒப்புக் கொள்ளப்பட்டதாகவும் அவர் கூறினார்.
அந்த ஒத்துழைப்பில் கூட்டு நடவடிக்கைகள், ஒருங்கிணைந்த ரோந்துப் பணிகள், உளவுத் தகவல் பரிமாற்றம் மற்றும் வழக்கமான பணிக் குழு கூட்டங்கள் ஆகியவை அடங்கும்.
மலேசியாவின் பரந்த எல்லைகளை, குறிப்பாக பெர்லிஸ் முதல் கிளந்தான் வரையிலும், சபா மற்றும் சரவாக்கிலும் உரிய பாதுகாப்புப் பணிகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன.
சட்டவிரோதக் குடியேறிகள் மற்றும் தடை செய்யப்பட்ட அல்லது கட்டுப்படுத்தப்பட்ட பொருட்களான பெட்ரோல், டீசல், அரிசி, மாவு மற்றும் சமையல் எரிவாயு ஆகியவற்றின் கடத்தலுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு அது உதவி வருவதாகவும் Mohd Yusri குறிப்பிட்டார்.



