Latestமலேசியா

முதியவர் காணாமல் போன மர்மம் விலகியது: அவரது சடலம் ஆற்றில் கண்டெடுக்கப்பட்டது மலாக்கா

மலாக்காவில், Hotel Casa De Rio அருகே உள்ள ஆற்றில் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அவர் காணாமல் போனதாகக் கூறப்பட்ட நிலையில், இறுதியில் அதன் மர்மம் விலகியது.

மலாக்கா தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையும் அரச மலேசியக் காவல் படையும் இணைந்து நடத்திய தேடுதல், மீட்புப் பணியின் போது, அம்முதியவர் காணாமல் போன இடத்திற்கு அருகிலேயே அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது.

காலை 10.10 மணியளவில் அச்சம்பவம் குறித்து தகவல் தங்களுக்குக் கிடைத்ததாகவும், அதனைத் தொடர்ந்து Melaka Tengah தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து தீயணைப்பு வாகனம் சம்பவ இடத்திற்குச் சென்றதாகவும் மலாக்கா தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் மக்கள் தொடர்பு அதிகாரி Mohd Hafidzatullah Rashid தெரிவித்தார்.

அந்த முதியவர் காலை சுமார் 5.45 மணியளவில் ஆற்றில் விழுந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. ஆற்றின் அருகே அந்த முதியவருக்குச் சொந்தமான சில பொருட்களும் கண்டெடுக்கப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!