
மலாக்கா, மே 7 – ஆயர் கெரோ தாவரவியல் பூங்கா பகுதியில் விற்பனைக்காக திங்கட்கிழமை Gaharu எனப்படும் அகர் மரம் ஒன்று வெட்டப்பட்டுக் கிடப்பதைக் கண்ட வனத்துறை அதிகாரி அளித்த புகாரைத் தொடர்ந்து கம்போடி நபர் ஒருவன் கைது செய்யப்பட்டான் .
40 வயதுடைய அந்த சந்தேக நபர் , சம்பவம் நடந்த இடத்திற்கு அருகிலுள்ள வாகன நிறுத்துமிடத்தில் அன்றைய தினம் பிற்பகல் மணி 2.35க்கு கைது செய்யப்பட்டதாக மலாக்கா மாநில போலீஸ் தலைவர் கிறிஸ்தோபர் பதிட் ( Christopher Pati) தெரிவித்தார்.
அதிக சந்தை மதிப்புள்ள அகர் மரக் கூழைப் பெறுவதற்காக, சம்பந்தப்பட்ட ஆடவன் அந்த மரத்தை சட்டவிரோதமாக வெட்டியுள்ளான் .
அந்த ஆடவன் பயன்படுத்தியதாக நம்பப்படும் ஒரு கார், வெட்டுக் கத்தி , சாக்குப்பை மற்றும் வெட்டப்பட்ட மரத்திலிருந்து பல மரத் துண்டுகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
சோதனையில், சந்தேக நபருக்கு போதைப்பொருள் வழக்குகள் தொடர்பான முந்தைய குற்றப் பதிவு இருப்பது கண்டறியப்பட்டது, ஆனால் சிறுநீர் பரிசோதனையின் முடிவுகள் எதிர்மறையாக இருந்தன.
இந்த விவகாரம் தண்டனைச் சட்டத்தின் 379வது பிரிவின் கீழ் திருட்டுக் குற்றத்திற்காக விசாரிக்கப்பட்டு வருகிறது.
விசாரணைக்கு உதவுவதற்காக சந்தேக நபர் வெள்ளிக்கிழமை வரை நான்கு நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளான்.



