
ஜெனிவா, மே-8 – அட்லாண்டிக் பெருங்கடலில் பயணம் செய்த MV Hondius என்ற சொகுசுக் கப்பலில் hantavirus பரவல் உறுதிச் செய்யப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனமான W.H.O தெரிவித்துள்ளது.
இதுவரை 5 பேருக்கு தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ள நிலையில், 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தக் கப்பல் அர்ஜென்டினாவிலிருந்து அண்டார்டிகா மற்றும் தெற்கு அட்லாண்டிக் தீவுகள் வழியாக பயணம் செய்தது.
இந்நிலையில் பயணிகளும் கப்பல் பணியாளர்களும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இது அரிதாகக் காணப்படும் ‘Andes’ வகை hantavirus ஆகும் என W.H.O அதிகாரிகள் கூறுகின்றனர்.
பொதுவாக இந்த வைரஸ் எலிகள் மூலம் பரவுகிறது.
ஆனால் இந்த Andes வகை கிருமி நெருங்கிய மனித தொடர்புகளாலும் பரவ வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இதையடுத்து பல நாடுகள் பயணிகளின் தொடர்புகளை கண்காணித்து வருகின்றன.
கப்பல் ஸ்பெயின் நாட்டின் கனாரி தீவுகளில் கடுமையான சுகாதார கட்டுப்பாடுகளுடன் தரையிறங்கவுள்ளது.
இந்த நோய்க்கு தற்போது குறிப்பிட்ட மருந்தோ தடுப்பூசியோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.



