Latestமலேசியா

12.6 மில்லியன் ரிங்கிட் கஞ்சா பூக்கள் பறிமுதல் 7 பேர் கைது

ஷா அலாம்,மே 8 – ஏப்ரல் 28 ஆம்தேதி முதல் 30 ஆம் தேதிவரை கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையமன (KLIA) மற்றும் செப்பாங்கில் உள்ள கோத்தா வாரிசான் ஆகிய பகுதிகளைச் சுற்றி தனித்தனியாக மேற்கொள்ளப்பட்ட மூன்று அதிரடி சோதனைகளில் 12.6 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள சுமார் 156.7 கிலோ கஞ்சா பூக்களைப் பறிமுதல் செய்த போலீசார் , மூன்று போதைப்பொருள் கடத்தல் கும்பல்களை முறியடித்துள்ளனர்.

அதோடு போதைப் பொருள் கடத்துபவர்கள் என்று நம்பப்படும் 18 முதல் 27 வயதுக்குட்பட்ட ஆறு ஆண்கள் மற்றும் ஒரு பெண் உட்பட வெளிநாட்டைச் சேர்ந்த ஏழு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டதாக சிலாங்கூர் போலீஸ் தலைவர் ஷசெலி கஹார் ( Shazeli Kahar ) கூறினார்.

மொத்தம் 580 ரிங்கிட் ரொக்கம், 20 யூரோ வெளிநாட்டு நாணயம் மற்றும் 80,000 ரிங்கிட் மதிப்புள்ள கைக்கடிகாரம் ஆகியவையும் இந்த நடவடிக்கையின்போது பறிமுதல் செய்யப்பட்டதாக இன்று சிலாங்கூர் போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் குறிப்பிட்டார்.

பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்கள் மலேசியாவிலிருந்து வெளியே எடுத்துச் செல்லப்பட்டு ஐரோப்பாவிற்கு அனுப்பப்படவிருந்தன, மேலும் அந்த விநியோகம் ஒரு அண்டை நாட்டிலிருந்து பெறப்பட்டதாக போலீஸ் நம்புகிறது என்று Shazeli Kahar தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!