Latestமலேசியா

கோலாலம்பூர் வானிலை ஆருடம் குறித்து வானொலியில் தினசரி மூன்று முறை அறிவிப்பு – ஹன்னா யோ

கோலாலம்பூர், மே 12 – கோலாலம்பூர் நகரவாசிகளுக்கு முன்கூட்டிய எச்சரிக்கை நடவடிக்கையாக, தலைநகரின் பல பகுதிகள் தொடர்பான குறிப்பிட்ட வானிலை ஆருடம் குறித்த முன்னறிவிப்புகள் இனி ஒரு நாளைக்கு மூன்று முறை நான்கு உள்ளூர் வானொலி நிலையங்கள் மூலம் ஒலிபரப்பப்படும்.

இந்தத் தகவல் அறிவிப்புகள் தினமும் காலை மணி 9.30 , மதியம் 12 மணி மற்றும் மாலை 4 மணிக்கு Radio Era, Hits, MyFM மற்றும் ராகா ஆகிய வானொலி நிலையங்கள் மூலம் வெளியிடப்படும் என்று பிரதமர் துறையின் கூட்டரசு பிரதேச அமைச்சர் ஹன்னா யோ
(Hanna Yeoh) தெரிவித்தார்.

நகரவாசிகள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில், இந்தத் தகவல்கள் பல்வேறு மொழிகளிலும் வழங்கப்படும்.

இந்த வானிலை தகவல்களில் ஸ்தாப்பாக் மற்றும் வங்சா மாஜூ போன்ற குறிப்பிட்ட இடங்களுக்கான அடுத்த ஒன்று முதல் இரண்டு மணி நேரத்திற்கான முன்னறிவிப்புகள் அடங்கும்.

இது ஒரு முன்கூட்டிய முயற்சி, ஏனென்றால் எல்லோரிடமும், குறிப்பாக முதியவர்களிடம், வானிலை செயலிகள் இருப்பதில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.

நகரவாசிகள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில், இந்தத் தகவல்கள் பல்வேறு மொழிகளிலும் வழங்கப்படும் என இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஹன்னா யோ குறிப்பிட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!