
ஷா ஆலாம், மே-14-ஷா ஆலாம் செஷன்ஸ் நீதிமன்றத்தில் பாதிரியார் மோசஸ் மெல்கிசெடெக் பாலசுப்பிரமணியத்திற்கு எதிராக நிலுவையில் இருந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் மீட்டுக் கொள்ள, AGC எனப்படும் தேசிய சட்டத் துறைத் தலைவர் அலுவலகம் முடிவுச் செய்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, இந்த கிரிமினல் வழக்கு அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்துள்ளது.
பிரதிவாதத் தரப்பு வழக்கறிஞர்கள் சமர்ப்பித்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட AGC, பாதிரியார் மோசஸ் மீதான குற்றச்சாட்டுகளைத் மீட்டுக் கொண்ட முடிவு, நேற்று மே 13-ஆம் தேதி நீதிமன்றத்தில் அதிகாரப்பூர்வமாகப் பதிவுச் செய்யப்பட்டது.
இந்நிலையில், இந்த இக்கட்டான காலகட்டத்தில் துணையாக இருந்த இறைவனுக்கும், தொடர்ந்து பிரார்த்தனைகளில் ஈடுபட்ட பெட்ரா இவாஞ்சலிகல் அண்ட் டெலிவரன்ஸ் (Petra Evangelical and Deliverance) தேவாலயத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் பாதிரியார் மோசஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் தங்களின் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளனர்.
மேலும், தங்களுக்குச் சிறந்த முறையில் வாதாடிய Messrs Selvam Shanmugam & Partners சட்ட நிறுவனத்தின் வழக்கறிஞர்கள் செல்வம் சண்முகம், தான் ஸ்ரீ ஷாஃபியி அப்துல்லா மற்றும் அவர்தம் குழுவுக்கும் அவர்கள் நன்றி கூறினர்.



