
ஆராவ், மே-14-ஆராவ்விலுள்ள ஒரு தொடக்கப்பப் பள்ளிக்குள் அத்து மீறி
நுழைந்து, பல ஆண் மாணவர்களைப் பிடித்து, தூக்கி முத்தமிட்டதாக கூறப்படும் வெளிநாட்டவர் என நம்பப்படும் ஒரு நபரை போலீசார் தேடிவருகின்றனர்.
நேற்று மாலை மணி 5.45அளவில் பள்ளி மைதானத்தில் ஒரு மாணவர் குழு சிலம்பப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாகத் ஆராவ் மாவட்ட போலீஸ் தலைவர் , Superintendan அகமட் மொஹ்சின் முகமட் ரோடி (Ahmad Mohsin Md Rodi ) தெரிவித்தார்.
சந்தேக நபர் பின்பக்க வாயில் வழியாக பள்ளி மைதானத்திற்குள் நுழைந்து, புறப்பாட நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த மாணவர் குழுவை அணுகியதாக தொடக்கக் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பந்தப்பட்ட அந்த நபரின் செயல் நடடிக்கை ஆசிரியர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
தனது மனைவியுடன் சிலம்பப் பயிற்சி செய்து கொண்டிருந்த 41 வயதான புகார்தாரர், அந்த நபரின் செயல்களைக் கவனித்த பிறகு அந்த நபரைத் தடுத்துள்ளார்.
பள்ளிப் பாதுகாவலர்களும் சந்தேக நபரை விரட்டியடிக்க உதவினர். பின்னர் அந்த நபர் பள்ளிக்கு அருகிலுள்ள வனப்பகுதிக்குள் தப்பியோடிவிட்டதாக அகமட் மொஹ்சின் தெரிவித்தார்.
சந்தேக நபருக்கு மலாய் மொழி சரளமாகப் பேசத் தெரியாது என்றும், அவர் தாய் மொழி மட்டுமே பேசுவார் என்றும் நம்பப்படுகிறது.
இந்த விவகாரத்தில் பள்ளிப் பகுதியில் உள்ள மாணவர்களின் பாதுகாப்பு சம்பந்தப்பட்டிருப்பதால், போலீஸ் இந்தச் சம்பவத்தை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறது.
சந்தேக நபரின் அடையாளம் மற்றும் உண்மையான நோக்கத்தைக் கண்டறியும் முயற்சிகள் உட்பட மேல் நடவடிக்கைக்காக இந்த விவகாரம் அராவ் போலீஸ் தலைமையகத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.



