
கோலாலம்பூர், மே 15 – B.S.N. எனப்படும் பேங்க் சிம்பானான் நேசனல் SSP பிரிமியம் குலுக்களில் பினாங்கு பட்டர்வெர்த்தை சேர்ந்த ஆசிரியர் முனிசுரன் மணியம் 10 லட்சம் ரிங்கிட் பரிசுத் தொகையை வென்றார்.
பினாங்கில் உள்ள இடைநிலைப் பள்ளியில் வரலாற்று ஆசிரியராக பணியாற்றிவரும் 56 வயதுடைய அவர் கடந்த 1990 ஆம் ஆண்டு பல்கலைக்கழக மாணவராக இருந்தது முதல் இன்றுவரை BSN வங்கியின் பிரிமியம் சேமிப்பு திட்டத்தின் பணத்தை சேமிக்கும் பழக்கத்தை கொண்டிருந்தவர் ஆவார்.
2026ஆம் ஆண்டு மே மாதம் 123 ஆவது BSN பிரிமியம் குலுக்களில் அவருக்கு கிடைத்த 10 லட்சம் ரிங்கிட் பரிசுத் தொகை ஆசிரியர் தினத்திற்கு கிடைத்த மிகப் பெரிய வெகுமதியாக கருதப்படுகிறது.
என்றாவது ஒரு நாள் BSN குலுக்களில் ஒரு பரிசு கிடைக்கும் என நினைத்ததாகவும் ஆனால் பெரிய தொகை கிடைக்கும் என தாம் எதிர்ப்பார்க்கவில்லை என மிகவும் மகிழ்ச்சியோடு முனிசுரன் தெரிவித்தார்.
எப்போதும் ஒரு கார் பரிசாக கிடைக்கும் என்பதுதான் எனது கனவாக இருந்தது .
புதிய கார் வாங்காமல் SSP பிரிமியம் திட்டத்தில் தாம் சேமித்து வந்ததாக அவர் கூறினார்.
29 மற்றும் 22 வயதுக்கிடையிலான தனது 4 பிள்ளைகளும் இந்த பிரிமியத் திட்டத்தில் சேமிக்கும் பழக்கத்தை கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தனக்கு கிடைத்த இந்த பரிசுத் தொகையை தொடர்ந்து சேமிப்பில் வைத்திருக்கப்போவதாகவும் இப்போதைக்கு அதனை பயன்படுத்தும் திட்டம் எதுவும் இல்லையென அவர் கூறினார்.
இவரது நான்கு பிள்ளைகளில் ஒருவர் படித்து வருகிறார், மற்ற மூவரும் வேலை செய்து வருகின்றனர்.
முனிசுரனின் மனைவியும் ஆசிரியையாக இருப்பதோடு கணவர் பணியாற்றும் பள்ளியிலேயே அவரும் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.



