Latestமலேசியா

ஸ்கூடாயில் பேரங்காடியில் பாதையை மறித்து தகராறு செய்த இரு ‘புரோட்டான் சாகா’ ஓட்டுநர்கள் சமரசம்

ஜோகூர் பாரு, மே-19-ஜோகூர், ஸ்கூடாயில் ஒரு பிரபல பேரங்காடி ஒன்றின் முன், பெரும் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்திய வைரல் காரசார விவாதம் ஒருவழியாக சுமுகமாக முடிவுக்கு வந்துள்ளது.

சனிக்கிழமை மாலை 5 மணிக்கு நிகழ்ந்த சம்பவத்தில், பேரங்காடிக்குள் நுழையும் பாதை தொடர்பாக U வளைவில் இரு ஓட்டுநர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து, அவர்கள் தங்களது ‘புரோட்டான் சாகா’ கார்களை நடுவழியிலேயே நிறுத்தி பாதையை முற்றிலுமாக மறித்தனர்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பின்னர் 6 மணிக்கெல்லாம் இருவருமே தனித்தனியாக போலீஸில் புகார் செய்தனர்.

​இருப்பினும், இந்த பதற்றம் நீண்ட நேரம் நீடிக்கவில்லை.

பிறகு இரு ஓட்டுநர்களும் நேரில் சந்தித்து, தங்களுக்குள் ஏற்பட்ட புரிந்துணர்வின்மையை சுமுகமாக பேசித் தீர்த்துக்கொள்ள சம்மதித்ததாக, வட ஜோகூர் பாரு போலீஸ் கூறியது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!