மலேசியா

சுபாங் டேய்லர்ஸ் பல்கலைக்கழக ஏரியில் ஆடவரின் சடலம் கண்டுபிடிப்பு

சுபாங் ஜெயா, மே-27,

சுபாங் ஜெயாவில் உள்ள டெய்லர்ஸ் பல்கலைக்கழக ஏரியில் ஓர் ஆடவரது சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை 4 மணிக்கு மேல் நிகழ்ந்த அச்சம்பவத்தில், சாட்சிகள், அந்த நபர் ஏரியில் விழுந்ததை கண்டதாக கூறியுள்ளனர்.

தகவல் கிடைத்து வந்துசேர்ந்த சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்பு துறை, 32 வயது அந்த உள்ளூர் ஆடவரை மீட்டு முதலுதவி சிகிச்சைகளை வழங்கியது.

எனினும், அவர் உயிரிழந்து விட்டதை மருத்துவக் குழு உறுதிப்படுத்தியது.

சவப்பரிசோதனைக்காக சடலம் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட நிலையில், தற்போதைக்கு இது ஒரு திடீர் மரணமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிக்கையில், அவர் மாணவர் அல்லது பணியாளர் அல்ல என்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!