மாணவர்களிடம் பாலியல் துஷ்பிரயோகம்: பெசூட்டில் இடைநிலைப்பள்ளி ஆசிரியர் கைது

பெசூட், மே-27,
திரங்கானு, பெசூட்டில் இடைநிலைப்பள்ளி ஒன்றில் பயிலும் இரண்டு மாணவர்களிடம் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 42 வயது ஆசிரியர் ஒருவரைப் போலீஸார் கைதுச் செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட மாணவர்கள் அளித்த புகார்களின் அடிப்படையில், அந்த ஆசிரியர் நேற்று மாலை அவரது வீட்டில் கைதுச் செய்யப்பட்டார்.
இந்தச் சம்பவம் குறித்து, 2017-ஆம் ஆண்டு சிறார் பாலியல் வன்கொடுமை சட்டத்தின் கீழ் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இக்குற்றம் நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் பிரம்படியும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
இதற்கிடையில், செத்தியூவில் மற்றொரு பள்ளியிலும் ஆசிரியர் ஒருவர் மீது பாலியல் புகார் எழுந்துள்ளதாகவும், அது குறித்து கல்வி அமைச்சின் நெறிமுறைக் குழு (Integrity Unit) தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் மாநிலக் கல்வி இலாகா தெரிவித்துள்ளது.



