மலேசியா

தாப்பா அருகே நேருக்கு நேர் மோதிய வாகனங்கள்: ஒருவர் பலி, 6 பேர் படுகாயம்

தாப்பா, மே-27,

தாப்பா, தாசேக் தெமோ (Tasek Temoh) அருகே இன்று அதிகாலை நிகழ்ந்த பயங்கர கார் விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்; மேலும் 6 பேர் படுகாயமடைந்தனர்.

​அதிகாலை 2.55 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்ததாகப் பேராக் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை தெரிவித்தது.

2 வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில், காரில் பயணித்த 29 வயது இளைஞர் உயிரிழந்த வேளை, அதே காரைச் செலுத்திய 40 வயது ஓட்டுநர் கடுமையான காயங்களுக்குள்ளானார்.

​மற்றொரு MPV வாகனத்தில் பயணித்த 19 முதல் 66 வயதுக்குட்பட்ட 5 பேரும் படுகாயமடைந்தனர்.

விபத்துக் காரணமாக அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

​உயிரிழந்தவரின் உடல் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு, காயமடைந்த அனைவரும் அவசர சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!