Latestமலேசியா

நெகிரி செம்பிலான் ஆடவருக்கு டோட்டோ ஜாக்பாட்டில் RM33.9 மில்லியன் பரிசு

கோலாலம்பூர், மே 28 -நெகிரி செம்பிலானைச் சேர்ந்த 46 வயதான ஆடவர் ஒருவர், மே 27 ஆம்தேதியன்று தனக்குப் பிடித்தமான எண்களின் தொகுப்பைக் கொண்டு சுப்ரீம் டோட்டோ 6/58 ஜாக்பாட்டை வென்று, வாழ்க்கையை மாற்றக்கூடிய 33.9 மில்லியன் ரிங்கிட் பரிசுத் தொகையை பெற்றார்.

பல ஆண்டுகளாக ஸ்போர்ட்ஸ் டோட்டோ எண்களை எடுத்துவரும் அந்த வெற்றியாளர், ஒரு பெரிய பரிசை வெல்வது இதுவே முதல் முறையாகும்.

அவர் ஒவ்வொரு குலுக்கலிலும் தவறாமல் பங்கேற்பதாகவும், குறிப்பாக ஜாக்பாட் தொகை அதிகரிக்கும்போது, ​​ஒவ்வொரு குலுக்கலுக்கும் சுமார் 20 ரிங்கிட் செலவிடுவதாகவும் தெரிவித்தார்.

வெற்றி பெற்ற எண்களின் தொகுப்பான 3, 7, 10, 38, 42 மற்றும் 52, தனக்கு மிகவும் பிடித்தமான எண் தொகுப்புகளில் ஒன்று என்பதோடு கடந்த சில மாதங்களாக இந்த எண்களின் தொகுப்பில் தொடர்ந்து பந்தயம் கட்டி வந்தாதாக அந்த திடீர் கோடிஸ்வரர் விவரித்தார்..

ஏதோ பெரிய பரிசை வெல்லப் போகிறேன் என்று ஒரு வலுவான உணர்வு தன்னிடம் இருந்ததோடு ,டோட்டோ ஜாக்பாட்டை யாரோ ஒருவர் வென்றிருப்பதாக ஒரு நண்பர் தெரிவித்த பின்னரே, வெற்றியாளர் தனக்குக் கிடைத்த 33,908,263.95 ரிங்கிட் ( 3 கோடியே 39 லட்சத்து 8,263 ரிங்கிட் 95 சென் மதிப்புள்ள அதிர்ஷ்டத்தைப் பற்றி அறிந்துகொண்டதோடு , தனது டிக்கெட்டைச் சரிபார்த்தபோது, ​​அந்த வெற்றியாளர் தாமே என்பதை அறிந்து இன்ப அதிர்ச்சிக்கு உள்ளானதாக அவர் கூறினார்.

பரிசுப் பணத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து முடிவெடுப்பதற்கு தனக்கு இன்னும் சிறிது அவகாசம் தேவைப்படும் என்பதோடு இப்போதைக்கு நிலுவையில் உள்ள கடன்கள் அனைத்தையும் தீர்ப்பதுவே உடனடி முன்னுரிமைகளில் ஒன்றாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!