
ஜோகூர் பாரு, ஜூன்-3- பாகோ, கம்போங் பாயா கோபி (Kampung Paya Kopi),(TD Farm Tanah ) வட்டாரத்தில் மொத்தம் உள்ள 2.4 ஹெக்டேர் சதுப்பு நிலத்தில் பரவிய தீயை , 0.8 ஹெக்டேர் பரப்பளவில் நேற்றைய நிலவரப்படி ஜோகூர் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை அணைத்துள்ளது.
அதே வேளையில் 1.6 ஹெக்டேர் பரப்பளவு நிலத்தில் இன்னும் தீ எரிந்து கொண்டிருப்பதாக அந்த வட்டாரத்தின் செய்தி தொடர்பாளர் கூறினார்.
ஏழு பணியாளர்களும் இரண்டுஉதவியாளர்களும் நேற்று தீயணைக்கும் பணியை மேற்கொண்டனர்.
நடமாடும் பம்ப் யூனிட் மூலம் திறந்த வெளி நீர் வளங்களை பயன்படுத்தி தீயை அணைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
நேற்று இரவு மணி 7 க்கு தீயணைப்பு பணி இடைநிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் பாகோ தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திற்கு திரும்பினர்.
முன்னதாக, தீயை அணைக்கும் பணி தொடங்குவதற்கு முன்பாக, மே 29 ஆம்தேதியன்று காலை மணி 11.49 க்கு சதுப்பு நிலப் பகுதியில் ஏற்பட்ட தீ குறித்து தீயணைப்பு படையினர் அவசர அழைப்பை பெற்றனர்.
ஞாயிற்றுக்கிழமையன்று, 2.4 ஹெக்டேர் பரப்பளவில் தீ பரவிய நிலையில், அதனை அணைக்கும் பணியில் தீயணைப்புப் படையினர் முழுமூச்சுடன் ஈடுபட்டனர்.



