இணைய மோசடி குற்றச் செயல்களை தடுப்பதில் மைடிஜிட்டல் ஐடி உதவ முடியும் – புக்கிட் அமான்

கோலாலம்பூர், ஜூன் 10 – இணைய மோசடி குற்றச் செயல்களை கட்டுப்படுத்துவதற்கு மைடிஜிட்டல் ஐடியை முழுமையாகப் பயன்படுத்துவது ஒரு முக்கிய செயல்திட்டமாக அமையக்கூடும் என புக்கிட் அமான் தெரிவித்துள்ளது.
வங்கி மற்றும் நிதிப் பரிவர்த்தனைகளில் இந்தத் தளத்தின் பயன்பாடு குறித்து விவாதிப்பதற்காக, மைடிஜிட்டல் ஐடி நிர்வாகத்துடன் போலீற்துறை பல கலந்துரையாடல்களை நடத்தியதாக வர்த்தகக் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் ருஸ்டி இசா (Rusdi Isa) கூறினார்.
மைடிஜிட்டல் ஐடி முழுமையாகப் பயன்படுத்தப்படும்போது, மோசடிகள் நடப்பதைத் தடுக்கக்கூடிய அம்சங்களில் ஒன்றாக அது இருக்கும் என்று நம்புவதாக இன்று நடைபெற்ற #JanganKenaScam எனப்படும் வங்கி நாயகர்கள் அங்கீகார நிகழ்வு 2026-க்குப் பிறகு நடந்த செய்தியாளர் சந்திப்பில் ருஸ்டி குறிப்பிட்டார்.
மோசடி கும்பல்களால் நகலெடுக்க முடியாத பல பாதுகாப்பு அம்சங்கள் மைடிஜிட்டல் ஐடியில் இருப்பதாகவும், இது மோசடியை திறம்படத் தடுக்கும்.
இதனிடையே, டீப்பேக் அழைப்புகள் மற்றும் பிஷிங் முயற்சிகள் உள்ளிட்ட மோசடி வழக்குகளில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு அதிகரித்து வருவதாக Maybank Community Financial Services Group குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி அகமட் தவ்பிக் அல்பர் தெரிவித்தார்.
அதே நேரத்தில், மோசடிகளைக் கண்டறிந்து எதிர்த்துப் போராட செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது உட்பட, திறன்களை மேம்படுத்துவதில் தொடர்ந்து முதலீடு செய்கிறோம்,” என்று அவர் கூறினார்.



