Latestமலேசியா

மலாய்க்காரர் அல்லாதோரின் விசுவாசத்தைக் கேள்வி கேட்காதீர்கள் – சனுசிக்குக் கடும் பதிலடி கொடுத்தார் அன்வார்

புக்கிட் மெர்தாஜாம், ஜூலை-25-மலாய்க்காரர் அல்லாத சமூகத்தின் விசுவாசம் குறித்துக் கேள்வியெழுப்பும் தொனியில் கெடா மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ சனுசி நோர் கூறிய கருத்துகளுக்குப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மலேசியாவிலுள்ள இந்தியர்களும் சீனர்களும் தங்களின் முன்னோர்களின் தாயகத்தை நாடிச் செல்ல முடியும் என, நெகிரி செம்பிலான் தேர்தல் பிரச்சாரத்தில் பெரிக்காத்தான் நேஷனல் (PN) தேர்தல் இயக்குநருமான சனுசி பேச்சியப் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்நிலையில், அது குறித்து இன்று கருத்துரைத்த பிரதமர், _”மலேசியாவில் வாழும் மலாய்க்காரர் அல்லாத சமூகத்தினர் நாட்டின் மீது கொண்டுள்ள விசுவாசத்தைக் கேள்வி கேட்பது ஏற்றுக்கொள்ள முடியாதது”_ என்றார்.

அனைத்து இன மக்களும் இந்நாட்டின் முன்னேற்றத்திற்கும் பாதுகாப்புக்கும் தொடர்ந்து பாடுபட்டு வருவதை அவர் நினைவூட்டினார்.

எனவே, பல்லின சமூகங்கள் வாழும் மலேசியாவில் இன ரீதியிலான பிரிவினையைத் தூண்டும் கருத்துகளைத் தவிர்க்க வேண்டும் என அன்வார் எச்சரித்துள்ளார்.

ஒற்றுமையையும் அமைதியையும் சீர்குலைக்கும் வகையில் அரசியல் தலைவர்கள் பேசுவதைத் தவிர்க்க வேண்டும் என்றார் அவர்.

சர்ச்சைக்குரிய பேச்சுகளுக்குப் பெயர் பெற்றவரான சனுசிக்கு, ஏற்கனவே, ம.இ.கா, MIPP, பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி கட்சிகள் கடும் கண்டனமும் எதிர்ப்பும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!