Latestமலேசியா

தேசியப் பயிற்சி வாரம்; பயிற்சி வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்த இளைஞர்களுக்குப் பிரதமர் அன்வார் அழைப்பு

பெர்த்மாத்தாங் பாவ், ஜூலை-25-தேசியப் பயிற்சி வாரத்தின் (NTW) கீழ் வழங்கப்படும் பயிற்சி வாய்ப்புகளை இளைஞர்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அழைப்பு விடுத்துள்ளார்.

_“இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப நாட்டின் எதிர்காலத் தொழிலாளர்களைத் தயார்படுத்த, திறன் மேம்பாட்டுத் திட்டங்களை அரசாங்கம் தொடர்ந்து மேம்படுத்தும்”_ என்றார் அவர்.

ஒவ்வொரு மலேசியரின் வாழ்க்கையையும் மேம்படுத்துவதில் பொறுப்புடனும் அர்ப்பணிப்புடனும் செயல்படும் அரசாங்கத்தை உருவாக்குவதே நமது இலக்கு என, பினாங்கு பட்டவொர்த்தில் 2026 தேசியப் பயிற்சி வார நிறைவு விழாவில் உரையாற்றிய போது அவர் குறிப்பிட்டார்.

மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன், பினாங்கு முதலமைச்சர் சாவ் கோன் யோவ் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

மக்களின் வேலை வாய்ப்புத் திறன் மற்றும் போட்டித்தன்மையை அதிகரிக்கும் நோக்கில் NTW உருவாக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட பிரதமர், நாட்டின் பயிற்சி முறையை மேலும் மேம்படுத்த மனிதவள அமைச்சான KESUMA மற்றும் HRD Corp-க்குக் கருத்துகளையும் பரிந்துரைகளையும் வழங்குமாறு பொது மக்களைக் கேட்டுக்கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!