Latestஅமெரிக்காஉலகம்

அமெரிக்கா – ஈரான் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம்: போர் முடிவுக்கு வருகிறது

வாஷிங்டன், ஜூன்-15-அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் நடவடிக்கைகளை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டு வருவதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக இரு நாடுகளும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன.

தீவிர பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்த அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக, சமரச முயற்சியில் ஈடுபட்ட பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் கட்டார் நாட்டு பிரதிநிதியும் தெரிவித்துள்ளனர்.

இதன் மூலம் லெபனான் உட்பட அனைத்து முனைகளிலும் இரு நாடுகளுக்கு இடையேயான இராணுவ நடவடிக்கைகள் உடனடியாகவும் நிரந்தரமாகவும் முடிவுக்கு வருகின்றன.

​இந்த ஒப்பந்தத்தை உறுதிப்படுத்தியுள்ள அமெரிக்க அதிபர் டோனால்ட் ட்ரம்ப், ஈரானுக்கு எதிரான கடல்வழி முற்றுகையை உடனடியாக மீட்டுக் கொள்ள உத்தரவிட்டுள்ளார்.

மேலும், உலக வர்த்தகத்திற்கு மிக முக்கிய பாதையான Hormuz கடல் வழிப்பாதை மீண்டும் திறக்கப்பட்டு, எண்ணெய் விநியோகம் வழக்கம் போல் தொடங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அமைதி ஒப்பந்தத்தை உறுதிச் செய்த ஈரானிய வெளியுறவு துணையமைச்சர், இது தெஹ்ரானுக்குக் கிடைத்த வெற்றி என வருணித்தார்.

​இந்த அமைதி ஒப்பந்தம் வரும் வெள்ளிக்கிழமை ஜூன் 19-ஆம் தேதி சுவிட்சர்லாந்தில் இரு நாட்டு தலைவர்களாலும் அதிகாரப்பூர்வமாக கையெழுத்திடப்படவுள்ளது.

பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட உலக நாடுகள் இந்த அரசதந்திர திருப்புமுனையை வரவேற்றுள்ளன.

​கடந்த பிப்ரவரி 28 முதல் நீடித்து வந்த இந்த வளைகுடாப் போர், இந்த ஒப்பந்தத்தின் மூலம் முடிவுக்கு வருவதால் உலகளாவிய பொருளாதாரமும், வட்டார நிலைத்தன்மையும் சீரடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!