Latestமலேசியா

போலி ஹலால் சான்றிதழ்: புக்கிட் காயு ஹீத்தாமில் 26 டன் உறைந்த கோழி இறைச்சி; அதிரடி பறிமுதல்

புக்கிட் காயு ஹீத்தாம், ஜூன்-15-நாட்டின் எல்லைப் பகுதியான புக்கிட் காயு ஹீத்தாமில் போலி ஹலால் சான்றிதழ்களைப் பயன்படுத்தி சட்டவிரோதமாகக் கொண்டு வரப்பட்ட 26 டன் எடையுள்ள உறைந்த கோழி இறைச்சியை உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலன்வின அமைச்சான KPDN-னின் அதிகாரிகள் அதிரடியாகப் பறிமுதல் செய்துள்ளனர்.

புக்கிட் காயு ஹீத்தாம் குடிநுழைவு, சுங்கம், தனிமைப்படுத்தல் மற்றும் பாதுகாப்பு வளாகத்தில் KPDN நடத்திய அதிரடிச் சோதனையின் போது இந்த கடத்தல் முறியடிக்கப்பட்டது.

எல்லையைக் கடக்க முயன்ற ஒரு கொள்கலன் லாரியைச் சோதித்த போது, அதில் போலி ஹலால் முத்திரைகள் பயன்படுத்தப்பட்ட, சுமார் 280, 320 ரிங்கிட் மதிப்புடைய உறைவிக்கப்பட்ட கோழி இறைச்சிப் பெட்டிகள் இருந்தது கண்டறியப்பட்டது.

நாட்டின் கடுமையான ஹலால் விதிமுறைகளை மீறி, பயனீட்டாளர்களை ஏமாற்றும் வகையில் செயல்பட்ட லாரி ஓட்டுநர் மற்றும் சம்பந்தப்பட்ட இறக்குமதி நிறுவனத்திற்கு எதிராக தற்பொழுது தீவிர விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

போலி சான்றிதழ்களைப் பயன்படுத்தி பயனீட்டாளர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவிப்போருக்கு எதிராக வர்த்தக விவரிப்புச் சட்டத்தின் கீழ் மிகக் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமைச்சு எச்சரித்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!