Latestமலேசியா

உலகில் அதிக அமைதியான நாடுகளின் வரிசையில் மலேசியாவுக்கு 12ஆவது இடம்

கோலாலம்பூர், ஜூன்-25 -உலகளாவிய அமைதி குறியீடு’ 2026-இல் 12-வது இடத்தைப் பிடித்ததன் மூலம், உலகின் மிகவும் அமைதியான நாடுகளில் ஒன்றாகத் தனது நிலையை மலேசியா தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது.

இந்தச் சாதனை, இந்த வட்டாரத்தின் மிகவும் அமைதியான நாடுகளாகத் திகழும் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் போன்ற பிற ஆசிய நாடுகளின் வரிசையில் மலேசியாவையும் இடம்பெறச் செய்துள்ளது.

நாட்டின் அமைதி, பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மைக்கு எப்போதும் முன்னுரிமை அளிப்பதை உறுதி செய்வதில் ‘மடானி அரசாங்கம் மேற்கொண்டு வரும் தொடர்ச்சியான முயற்சிகளையே இந்தச் சாதனை பிரதிபலிக்கிறது என்று உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுட்டியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.

அனைத்துப் பாதுகாப்புப் படைகள், அமலாக்க நிறுவனங்கள் மற்றும் அனைத்துத் தரப்பினரின் அர்ப்பணிப்புமிக்க செயல்பாடுகளின் விளைவே இந்த அங்கீகாரமாகும் என ர் இன்று தனது முகநூலில் அவர் பதிவிட்டார்.

அமைதி என்பது ஒரு சாதனை மட்டுமல்ல, அது மக்களின் நல்வாழ்வு, முதலீட்டாளர்களின் நம்பிக்கை மற்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றிற்கான அடித்தளமும் ஆகும். பொதுப் பாதுகாப்பை மேம்படுத்துதல், சட்ட அமலாக்கத்தை வலுப்படுத்துதல், எல்லைக் கட்டுப்பாட்டைத் தீவிரப்படுத்துதல் மற்றும் குற்றச் செயல்களை துடைத்தொழிப்பது ஆகியவற்றுக்கான முயற்சிகளை அரசாங்கம் தொடர்ந்து வலுப்படுத்தும் என்று சைபுடின் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!