Latestமலேசியா

கோலாலம்பூர் மாநகர் மன்றத்தின் வாரியக்குழு உறுப்பினராக தியாகராஜ் நியமனம்!

கோலாலம்பூர் ஜூன் 29-கோலாலம்பூர் மாநகர் மன்றத்தின் வாரியக்குழு உறுப்பராக தியாகராஜ் சங்கர நாராயணன் இன்று நியமனம் செய்யப்பட்டார்.

கல்வி அமைச்சர் பாட்லினா சீடேக்கின் சிறப்பு அதிகாரியாக பணியாற்றிய இவர் இன்று முதல் கோலாலம்பூர் மாநகர் மன்றத்தின் வாரியக்குழு உறுப்பினராக பொறுப்பு ஏற்றார்.

இன்று கோலாலம்பூர் மாநகர் மன்றம் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இவருக்கு நியமன உறுதி கடிதத்தை டத்தோ பண்டார் Datuk Seri TPr Fadlun bin Mak Ujud வழங்கினார்.

கூட்டரசு பிரதேச அமைச்சர் ஹன்னா இயோ இந்த நிகழ்வில் கலந்து சிறப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கூட்டரசு பிரதேச கெஅடிலான் கட்சியின் துணைத் தலைவருமான இவர் லெம்பா பத்தாய் தொகுதி கெஅடிலான் தலைவராகவும் இருக்கிறார்.

தம் மீது நம்பிக்கை வைத்து கோலாலம்பூர் மாநகர் மன்றத்தின் வாரியக்குழு உறுப்பராக நியமனம் செய்த மாட்சிமை தங்கிய மாமன்னர் மற்றும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று தியாகராஜ் குறிப்பிட்டார்.

சிறைச்சாலை உளவுத்துறை அதிகாரியாக (ASP) 17 ஆண்டுகளாக இவர் பணியாற்றி இவர் அரசியலில் காலடி எடுத்து வைத்து சிறந்த முறையில் சேவையாற்றி வருகிறார்.

கோலாலம்பூர் மாநகர் மன்றத்தின் வாரியக்குழு உறுப்பினர் பதவி தமக்கு வழங்கப்பட்டதை எண்ணி பெருமை கொள்கிறேன்.

மக்களின் குறைகளை கேட்டறிந்து சிறந்த முறையில் அவற்றுக்கு தீர்வு காண கடுமையாக உழைப்பேன் என்று தியாகராஜ் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!