Latestமலேசியா

உலக அரங்கில் மலேசியாவுக்குப் பெருமை: MCMCயின் 3 டிஜிட்டல் திட்டங்களுக்கு ‘WSIS 2026’ விருது அங்கீகாரம்

சைபர்ஜெயா, ஜூலை-1-மலேசியத் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான MCMC-யின் கீழ் உருவாக்கப்பட்ட 3 முக்கிய டிஜிட்டல் திட்டங்கள், உலகளாவிய ‘WSIS 2026’ விருதுகளில் ‘சாம்பியன் திட்டங்கள்’ (Champion Projects) என்ற உயரிய அனைத்துலக அங்கீகாரத்தைப் பெற்றுள்ளன.

விருது பெற்ற அந்தத் திட்டங்களில், ‘ஆசியான் 5G திறன் கட்டமைப்பு’, ‘MCMC 2026-2030 திட்டம்’ மற்றும் போலிச் செய்திகளை முறியடிப்பதில் முக்கியப் பங்காற்றும் ‘Sebenarnya.my’ இணையப் பக்கம் ஆகியவை அடங்கும்.

122 நாடுகளிலிருந்து சமர்ப்பிக்கப்பட்ட 1,595 திட்டங்களுக்கு இடையே, 2.2 மில்லியனுக்கும் அதிகமான உலகளாவிய பொது மக்களின் வாக்குகளைப் பெற்று மலேசியா இந்த வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது.

இந்த சாம்பியன் திட்டங்களிலிருந்து ஒவ்வொரு பிரிவிலும் ஒரு முதன்மை வெற்றியாளர் தேர்வுச் செய்யப்பட்டு, வரும் ஜூலை 9-ஆம் தேதி சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் நடைபெறும் அதிகாரப்பூர்வ விழாவில் அறிவிக்கப்படவுள்ளார்.

மலேசியாவின் டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சி அனைத்துலகத் தரத்தில் இருப்பதை இந்தத் தொடர் அங்கீகாரம் மீண்டும் மெய்ப்பித்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!