
கோலாலம்பூர், ஜூலை.02- எந்தவொரு பொதுச் சேவைகளுக்கான கட்டண விகிதங்களையும் தரை பொது போக்குவரத்து ஆணையம் APADட்தான் முறைப்படுத்துகிறது. பொது-தனியார் ஒத்துழைப்பில் மேற்கொள்ளப்படுவதும் அதில் அடங்கும் என போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. அனைத்து மக்களும் இச்சேவைகளை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்வதை உறுதி செய்வதே, பொதுப் போக்குவரத்துக் கட்டணங்களைக் கட்டுப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் இந்நடவடிக்கையின் நோக்கம் என அமைச்சர் Anthony Loke விளக்கினார்.
கட்டணங்கள் அரசாங்கத்தால் ஒழுங்குபடுத்தப்படுகின்றன என்பது உண்மைதான். Monorel, LRT மற்றும் பிற திட்டங்களைப் பொறுத்தவரை, அவை நிதி ரீதியாக சாத்தியமானவையாக இருக்கின்றன. அதோடு பொதுமக்களுக்குச் சுமையாக இல்லாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக கட்டணங்களைக் கட்டுப்படுத்துவதாக அவர் தெளிவுபடுத்தினார்.
கட்டணங்கள் முடிந்தவரை குறைவாக வைக்கப்படுகின்றன. இருப்பினும், பொது-தனியார் ஒத்துழைப்புத் திட்டங்களுக்கு முதலீட்டின் மீதான வருமானம் தேவைப்படுவதால், கட்டணங்களை ஒழுங்குபடுத்துவது இந்தத் தனியார் துறைத் திட்டங்களின் போட்டித்தன்மையைக் குறைக்கலாம்.
எடுத்துக்காட்டாக பெரும்பாலான நெடுஞ்சாலைகள் பொது-தனியார் ஒத்துழைப்பு மாதிரியைப் பயன்படுத்தி கட்டப்பட்டன. மேலும் குறிப்பிட்ட விதிமுறைகளுக்குள் டோல் கட்டணங்கள் ஒப்புக் கொள்ளப்பட்டன என Anthony Loke மக்களவையில் கேள்வி நேரத்தின் போது விளக்கினார்.



