Latest

அமெரிக்காவின் எம்பயர் ஸ்டேட் கட்டிட உச்சியில் காதலை வெளிப்படுத்திய காதல் ஜோடி கைது

அமெரிக்கா, ஜூலை 2 – அமெரிக்காவின் நியூயோர்க் நகரிலுள்ள எம்பயர் ஸ்டேட் (Empire State) கட்டிடத்தின் உச்சியில் ஏறி, உயிரை பணயம் வைத்து காதலை வெளிப்படுத்திய காதல் ஜோடியை போலீசார் கைது செய்துள்ளனர்.

கருப்பு உடையணிந்து முகத்தை மறைத்திருந்த இருவரும், “அன்பின் சக்தி அதிகார ஆசையை வெல்லும் போது உலகில் அமைதி நிலவும்” என்ற வாசகம் இடம்பெற்ற பதாகையை காட்டியுள்ளனர்.

பின்னர் இளைஞர் மண்டியிட்டு தனது காதலியிடம் திருமணத்திற்கு சம்மதம் கேட்ட பின் இருவரும் ஒருவரையொருவர் அணைத்துக்கொண்டு முத்தமிட்டனர்.

இந்தச் சம்பவத்தில் யாருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை. இருவரையும் எந்த அசம்பாவிதமுமின்றி போலீசார் கைது செய்தனர்.

பொதுமக்களுக்கு அனுமதி இல்லாத அப்பகுதிக்கு அவர்கள் எவ்வாறு சென்றனர் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!