Latestமலேசியா

பாங்கியில் உணவுக் கடையில் தீ; தொழிலாளருக்கு மூச்சுத் திணறல்

பாங்கி, ஜூலை-03-பண்டார் பாரு பாங்கியில் நேற்றிரவு Ayam Gepuk உணவுக் கடையொன்றில் தீ பரவியதில் அங்கு வேலை செய்து வந்த இந்தோனேசியப் பெண் ஒருவர் மூச்சுத் திணறலுக்கு ஆளானார்.

அச்சம்பவம் குறித்து தங்களுக்கு இரவு 7.54 மணியளவில் தகவல் கிடைத்ததாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் நடவடிக்கைப் பிரிவு உதவி இயக்குநர் Ashrul Riezal Asbar தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் அடங்கிய குழுவொன்று சம்பவ இடத்திற்கு விரைந்ததாக அவர் கூறினார்.

அத்தீயில் இரண்டு மாடிகளைக் கொண்ட கட்டத்தின் கீழ் தளம் 70 விழுக்காடு சேதமடைந்தது. அச்சம்பவத்தில் மூச்சுத் திணறலுக்கு ஆளான 26 வயது இந்தோனேசியப் பெண் பணியாளருக்கு முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டதாக Ashrul குறிப்பிட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!