Latestமலேசியா

ஒவ்வொரு AWAS கேமராவையும் பராமரிக்க ஆண்டுக்கு ஒரு லட்சம் ரிங்கிட்டுக்கும் மேல் செலவாகிறது

கோலாலம்பூர், ஜூலை-3-AWAS எனும் தானியங்கி விழிப்புணர்வு பாதுகாப்பு முறை கேமராக்கள் ஒவ்வொன்றையும் பராமரிக்க ஆண்டுக்கு ஏறக்குறைய ஒரு லட்சத்து 12 ஆயிரம் ரிங்கிட்டுக்கும் மேல் செலவாவதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்தொகையானது தடுப்புப் பராமரிப்பு, பழுதுபார்ப்பு, அவ்வப்போது மேற்கொள்ளப்படும் சரிபாரிப்பு ஆகியவற்றையும் உட்படுத்தியிருக்கிறது. இருப்பினும் மொத்தச் செலவில் பிற கூறுகளும் அடங்கியிருப்பதாக அமைச்சர் Anthony Loke விளக்கினார்.

AWAS பராமரிப்புச் செலவு குறித்து நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட வினாவுக்கு அளித்த எழுத்துப்பூர்வ பதிலில் அவர் அவ்வாறு கூறியிருந்தார்.

செலவு அதிகமாக இருப்பதால், அதன் முதலீட்டுக்கான பலனை மதிப்பிடுவதற்கு அமைச்சு எவ்வகையில் தணிக்கையை நடத்தத் திட்டமிட்டுள்ளது என வினவப்பட்டபோது, இந்த அமைப்பின் செயல்திறன் நிதி ரீதியான வருவாயை மட்டும் அடிப்படையாகக் கொண்டு மதிப்பிடப்படுவதில்லை என்று Loke கூறினார்.

சாலைப் பாதுகாப்பில் அது ஏற்படுத்தும் தாக்கம் மற்றும் சாலைப் பயனீட்டாளர்கள் போக்குவரத்து விதிகளைப் பின்பற்றும் நிலை ஆகியவையும் இதில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன என்றாரவர்.

AWAS அமைப்பைப் பராமரிக்க ஆண்டுக்கு சுமார் 15 மில்லியன் ரிங்கிட் செலவிடப்படுவதாக கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் Loke தெரிவித்திருந்தார்.

2025 ஜனவரியில், AWAS அமைப்பிற்கான பராமரிப்பு மற்றும் ஆதரவுச் சேவைகளை வழங்க, சாலைப் போக்குவரத்துத் துறையிடமிருந்து 22.35 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான மூன்று ஆண்டு ஒப்பந்தத்தை Infomina Bhd நிறுவனம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!