Latestமலேசியா

இந்தோனேசியாவில் சுன்னத் அழைப்பிதழ் தொடர்பில் தகராறு; அண்டை வீட்டுக்காரரால் ஆடவர் சுட்டுக் கொலை

லம்போங், ஜூலை-4 – இந்தோனேசியாவில் மகனது சுன்னத் விழா அழைப்பிதழ் தொடர்பான தகராறில் அண்டை வீட்டாரால் ஆடவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

​விழாவுக்குத் தன்னை அழைக்காததால் அதிருப்தி அடைந்த சந்தேக நபர், பாதிக்கப்பட்டவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இந்த மோதல் முற்றி, துப்பாக்கிச் சூட்டில் முடிந்தது.

இதில் பாதிக்கப்பட்ட 42 வயது நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவல் அறிந்த போலீஸார், தப்பிபோடிய சந்தேக நபரைத் தேடி வருவதோடு, இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சம்பவம் நடந்த இடத்தைச் சுற்றியுள்ள பொது மக்களிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ள போலீஸார், சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!