Latestஉலகம்

சீனாவில் சூறாவளி, புயல் தாக்கம்; 11 பேர் பலி, நூற்றுக்கணக்கானோர் காயம்

சீனா, ஜூலை 8 – சீனாவில் சக்திவாய்ந்த சூறாவளி மற்றும் கடும் புயலால் குறைந்தது 11 பேர் உயிரிழந்ததுடன், 330-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மேலும், ஒருவர் மாயமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த கடும் வானிலையால் சுமார் 14,600 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 20-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்ததுடன், 4,800-க்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்துள்ளன. சம்பந்தப்பட்ட நகரை தாக்கிய EF2 வகை சூறாவளியால் பல கட்டிடங்கள் மற்றும் வாகனங்களும் கடுமையாக சேதமடைந்தன.

இதனிடையே, தெற்கு சீனாவில் வெப்பமண்டல புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதுடன், எட்டு பேர் காணாமல் போயுள்ளனர். மேலும், 61,000-க்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், அப்பகுதியில் மிக உயர்ந்த சிவப்பு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!