Latestசினிமா

நீண்ட காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி: ‘ஜனநாயகன்’ படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ்; ஜூலை 24-ல் பிரம்மாண்ட வெளியீடு

Dass – NEWS 1 *AMENDED*

 

*நீண்ட காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி: ‘ஜனநாயகன்’ படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ்; ஜூலை 24-ல் பிரம்மாண்ட வெளியீட*

 

*Vijay’s ‘Jana Nayagan’ gets ‘A’ certificate; Official release confirmed for July 24*

 

 

சென்னை, ஜூலை 10,

 

தமிழ் சினிமா வரலாற்றில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் கடைசித் திரைப்படமான ‘ஜனநாயகன்’, நீண்ட காத்திருப்புக்குப் பிறகு தற்போது திரைக்கு வரத் தயாராகியுள்ளது.

 

கடந்த ஜனவரி மாதமே வெளியாக வேண்டிய இந்தப் படம், தணிக்கைச் சான்றிதழ் பெறுவதில் ஏற்பட்ட பல்வேறு சிக்கல்களால் சுமார் 7 மாதங்களாகத் தள்ளிப்போனது.

 

இந்நிலையில், வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, KVN Production வணிகத் தலைவரும் தயாரிப்பாளருமான சுப்ரித் மோகன், படத்திற்கு தணிக்கை வாரியம் ‘ஏ’ (A) சான்றிதழ் வழங்கியுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளார்.

 

அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கங்களில் இன்னும் அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும், இப்படம் வரும் ஜூலை 24-ஆம் தேதி திரைக்கு வரும் என்பதை சுப்ரித் மோகன் உறுதிச் செய்துள்ளார்.

 

தணிக்கை வாரியத்தின் அறிவுறுத்தல்படி, படத்தில் இருந்து 43 வினாடிகள் நீக்கப்பட்டு, மொத்தம் 180 நிமிட ஓட்டத்துடன் இப்படம் திரையிடப்படவுள்ளது.

 

எச். வினோத் இயக்கத்தில், அனிருத் இசையில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படம், விஜய் அரசியலுக்குச் சென்ற பிறகு வெளியாகும் முதல் படம் என்பதால், இரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

இதற்கிடையே, இந்தப் படத்தைத் தயாரித்த கே. வெங்கட நாராயணா, தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதங்களை உருவாக்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

 

வழக்கமாக விஜயின் படங்கள் வெளிவரும் போது திரையரங்குகளில் களைக்கட்டும் ‘தளபதி’ திருவிழா, இந்த முறை ‘முதல்வர் விஜய்’ திருவிழாவாக அமையப்போவதால், இரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

 

ஜூலை 24-ல் வெளியாகவுள்ள இந்த அரசியல் மற்றும் அதிரடித் திரைப்படம், வசூல் சாதனையை முறியடிக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்…

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!