Latestமலேசியா

ஆராவில் மனைவியைத் தாக்கிய கணவர் கைது

ஆராவ், ஜூலை-18 – பெர்லிஸ், ஆராவில் தனது மனைவியை கொடூரமாக தாக்கியதாக 39 வயது நபர் ஒருவர் கைதுச் செய்யப்பட்டுள்ளார்.

Jalan Kubang Siput பகுதியில், தனது 4 வயது குழந்தையை பள்ளிக்கு அழைத்துச் செல்ல முற்பட்ட பெண்ணை, அவரது கணவர் ஆத்திரத்தில் தாக்கியுள்ளார்.

மனைவியின் தலைமுடியை பிடித்து இழுத்து, தரையில் அழுத்தி, கடுமையாக தாக்கியதில் அந்தப் பெண் காயமடைந்தார்.

​விசாரணையில், கடந்த 2005-ம் ஆண்டு முதல் போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையான அந்த நபர், அடிக்கடி மனைவியை துன்புறுத்தி வந்தது தெரியவந்துள்ளது.

பாதிக்கப்பட்ட பெண் சுல்தான் துங்கு ஃபாவ்சியா (HTF) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.

​சந்தேக நபர் மீது 6 குற்றப் பதிவுகள் உள்ள நிலையில், அவர் ஜூலை 23-ஆம் தேதி வரை தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!