
புத்ராஜெயா, ஜூலை-27 – இஸ்லாத்துக்கு மதம் மாறிய பெண் ஒருவருக்கு, மறைந்த அவரது முஸ்லீம் அல்லாத தந்தையின் சொத்தில் பாரம்பரிய உரிமை உண்டு என்ற வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பை புத்ராஜெயா மேல்முறையீட்டு நீதிமன்றம் உறுதிச் செய்துள்ளது.
நீதிபதி Supang Lian தலைமையிலான 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு, நாட்டின் சிவில் சொத்துப் பங்கீட்டுச் சட்டங்கள் Amira Umaira Teng Abdullah-வுக்குச் சொத்துரிமையை மறுக்கவில்லை எனத் தீர்ப்பளித்தது.
2008-ல் இஸ்லாத்திற்கு மாறியதைத் தொடர்ந்து, தனது 7 பிள்ளைகளில் நான்காவது மகளான Amira Umaira Teng Abdullah-வை, அரவது தாயார் சொத்துக்கான வாரிசுப் பட்டியலிலிருந்து திட்டமிட்டு நீக்கினார்.
இந்நிலையில், சிவில் சட்டங்களின் கீழ் சொத்துகளைப் பிரித்தளிப்பதில் பிள்ளைகளின் மத நிலைப்பாடு தடையாக இருக்காது என்ற உயர் நீதிமன்றத் தீர்ப்பை உறுதிச் செய்த நீதிமன்றம், அமீராவின் தாயாருக்கு 30,000 ரிங்கிட் நீதிமன்றச் செலவுத் தொகையையும் விதித்தது.



