Latestமலேசியா

போர்ட்டிக்சனில் சக நாட்டவர்களுக்கிடையிலான மோதல்: 3 வங்கதேசத் தொழிலாளர்கள் மரணம், ஒருவர் பலத்த காயம்

நெகிரி செம்பிலான், ஆகஸ்ட் 4 – நெகிரி செம்பிலான், போர்ட்டிக்சன் தாமான் லிங்கியில், சக நாட்டவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் மூன்று வங்காளதேசத் தொழிலாளர்கள் உயிரிழந்ததுடன், மேலும் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக 40 வயதுடைய வங்காளதேச ஆண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்த மூவரும் பலத்த காயங்களால் இறந்ததாகவும், காயமடைந்தவர் ரெம்பாவ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

அனைவரும் ஒரே இடத்தில் தங்கி, ஒரே நிறுவனத்தில் பணியாற்றியவர்கள் என ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது. கொலைக் குற்றத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், சம்பவத்திற்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!